Thursday 14 May 2020

ராஜாராமன்-1


ராஜாராமன்-1
 ________________________
என்னென்ன தாகம் ?
ஞானம்
சித்தி
யோகம்
தவம்
என்னென்ன
தாகம்!
எத்தனை
மாயம்.!.

உத்தமம்
உச்சம்
ராம்
ராம்   

                                                                            


யுகம் வென்ற நிஜம்  
சுகம்
துக்கம்
காற்று
கரை
அலை
நிலை?

ராம்
ராம்
யுகம்
வென்ற
நிஜம்
ராம்
ராம்  
காந்தி
விட்ட
கடைசி
மூச்சு 
உபாயம்
ராம்
மிதம்
இதம்
சர்வம்
சத்யம்

வழி
சுற்றும்
முடியும்

உபாயம்

ராம்
ராம்

சுதந்திரம் சுலபம்

துற
மற
ஒன்று
ஒன்றாய்..
சுமை
குறை..
சுதந்திரம்
சுலபம்

மார்க்கம்
ராம்
ராம்
                                                                               

முழுமனிதனாக வாழ்ந்து காட்டியவன் இராமன். இதில் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம்.எனினும் ஸ்ரீ ராமனே லட்சியமனிதன் என்று இந்திய உள்ளம் ஒப்புக்கொள்கிறது.
எனவே இந்தத்தொடர்.மீண்டும் சொன்னதையே[யுகாவில்]
திருப்பிச் சொல்லவேண்டி வருகிறது.மேஜிக்கல் ரியாலிசம்,போஸ்ட் மாடர்னிசம் என்று வகைவகையான இசங்கள் மேற்கத்திய இலக்கிய மரபில் தோன்றி விரக்திப்பெருமூச்சு விட்டு மறைந்து மியூசியம் பொருள் ஆனாலும், இராமாயணம் எல்லா இசங்களின் சாராம்சமாகி இன்றும் நிற்கிறது. பாரத பூமி அந்த மஹா இதிகாசத்திடமிருந்து இன்றும் பாடம் பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஏறக்குறைய உலக இதிகாசங்களை ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் ஈடிணையற்ற அதன் செல்வாக்கை குக்கிராமங்கள் வரை உற்று கவனித்து வருகிறேன்..தமிழ் உட்பட பல மொழிகளில் பல பார்வைகளில் இராமாயணக்கதை எழுதப்பட்டு வந்தாலும் இன்னும் ஓர் நிறைவின்மை உணர்ந்து பரம்பொருளைப் பிரார்த்தித்து அதை ராஜாராமன் என்ற பெயரில் நாவல் வடிவில் கதாபாத்திரங்களுக்கு உரிய குணாம்சம் கொடுத்து நான் எழுதத்தொடங்குகிறேன்.
பெருமாள் கோவில்களில் ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுவதையும் இலங்கையிலிருந்து இமயம் வரை ராமனின் பெருமை பரவி  இருப்பதையும் உலகின் பல மூலைகளில் ராமனுக்கு வழிபாடு உள்ளதையும் எவருமே மறுக்கமுடியாது.ராமனை,கீழ்மைப்படுத்திய பல முயற்சிகள் நடந்துள்ளன. அவை தோற்றுப்போய் விட்டன. அரசியல் ஆகிவிட்டன.எனினும் இந்திய இதயம் ராஜாராமனுக்கு உரிய மரியாதையைத் தந்துவருகிறது.என்னதான் ஆணுரிமை பெண்ணுரிமை பேசினாலும் சீதையை மாதா என்று தான் பாரதம் போற்றிவருகிறது,
ராஜாராமன் என்ற பெயரில் ஒரு நாவலை எழுத முனைகிறேன். இராமாயணக்கதை வெவ்வேறு வடிவில் ஒளி,ஒலி .எழுத்து வடிவில் வெளிவந்தாலும் ஒரு நாவலாக நம் புலன்களைத்தொட்டு நமக்குள் நுழையும் முயற்சி என் வாசக அனுபவத்தில் கிட்டவில்லை.குறையை நிறைவு செய்யவேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை.
அதற்குமுன் யுகா பதிவிற்கு ஒரு மாணவர்[Sekar Arumugam] இட்ட பதிவை முன்னோட்டமாக வழங்குகிறேன்.இது என்னையறியாமல் ஒரு நல்ல ஆசிரியனாக இருக்க வாய்ப்பு நேர்ந்த திருப்தி
…….உங்கள் படைப்புகள் அனைத்தையும் நான் படித்ததில்லை.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு குமுதம், விகடன் போன்ற இதழ்களில் பிரசுரமான சிறுகதைகள் சிலவற்றை வாசித்ததுண்டு.சில மாதங்களுக்கு முன்பு தங்களின் கதைத்தொகுப்பு பிரதி ‌ஒன்றை வரவழைத்து வாசிக்க ஆரம்பித்தேன்.இன்னும் முழுவதுமாக முடிக்கவில்லை.காரணம் தொடர் வாசிப்பிற்கு கண்களின் ஒத்துழையாமை மற்றும் ஈர்ப்பின்மை.ஆனால் தங்கள் படைப்புகளிலேயே‌ வித்தியாசமான ‌நடை ,மட மடவென தூணடுவதோடு செரிவு மிகுந்து காணப்படுகிறது.
படைத்தல் கடினமானது, விமர்சனம் செய்வது எளிதானது போகிற போக்கில் அனைவரும் எளிதாகச் செய்யக்கூடியது.எளிதான அதனை மட்டுமே நான் செய்திருக்கிறேன்.பிழையாயின் மன்னிக்க வேண்டும்.
பள்ளியில் பாடத்தை சரியாக படிக்காமல் 1966-67களில் குமுதத்தில் பிரசுரமான தூக்கு மரத்தின் நிழலில், பட்டாம்பூச்சி,ரா.கி.ரங்கராஜனின் படகு வீடு, சாண்டில்யன் அவர்களின் யவன ராணி, கடல் புறா,ராஜமுத்திரை மற்றும் ஜாவர் சீத்தாராமனின், உடல் பொருள் ஆனந்தி, மின்னல் மழை மோகினி மற்றும்
விகடன் இதழில் வெளிவந்த ‌மணியன் அவர்களின் பயணக் கட்டுரைகள்,சாவி அவர்களின் படைப்புகள்,
இரு இதழ்களிலும் வெளியான ஜெயகாந்தன் அனைத்து ‌படைப்புகள், தீபம் பார்த்தசாரதியின் படைப்புகள் & இத்யாதிகள்.இப்படியிருக்க எங்கனம் பள்ளி ப்பாடத்தை படித்திருக்க இயலும்?
1990களிலிருந்து சு.ரா, கி.ரா, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், ராமகிருஷ்ணன், தமிழ் ச்செல்வன் போன்றவர்களின் படைப்புகள்.
தற்போது சு.வெங்கடேசன்.
ஒப்பீடு செய்வதென்பது ஆகப்பெரிய தவறு தான் ஆயினும் என் கருத்தைப் பதிய வேறு வழி தெரியவில்லை.
தங்களின் இந்த படைப்பின் செறிவு, ஈர்க்கும் நடை எனது பார்வையில் ‌சு.வெங்கடேசனை நினைவூட்டுகிறது என்பது எனது தாழ்மையான கருத்து.
மேற்படி எனது கருத்து ஏதேனும் ஒரு வகையில் எனது ஆசானுக்கு சினமூட்டுமேயானால்‌
67-68களில் பாடத்தை ஒப்புவிக்காததால் வாங்கிய பிரம்படியை மீண்டும் வாங்கிக் கொள்ளத்தயாராகிறேன்.
எவ்வாறென்றால்
நாராய் நாராய் (ஒரு பிரம்படி)
செங்கால் நாராய்..(மறு பிரம்படி)
இவ்வாறாக..
சிரம் தாழ்த்தி வணங்கி விடை பெறுகிறேன்.
Sekar Arumugam